ஆரோக்கியம் 'உள்ளவன்'

ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே. முட்டாப் பயலை எல்லாம் தாண்டவக்கோனே - காசு முதலாளி ஆக்குதடா தாண்டவக்கோனே

Saturday, July 30, 2005

நான் இந்து அல்ல, ஏன்? - ராமேந்திரா நாத்

"இந்து" என்ற சொல் ஒரு குறிப்பிட்ட மதத்தவருக்கு மட்டும் உரியதல்ல என்ற கருத்தை ராமேந்திரா நாத் அவர்களின் "Why I am not a Hindu" என்ற ஆக்கத்தின் மொழி பெயர்ப்பை தமிழ்மணம் வாசகர்களுக்கு அளிப்பதில் பெருமிதம் அடைகிறேன்.

முன்னுரை:

பெர்னார்டு ருஸ்ஸல் அவர்களின் "நான் ஏன் கிறிஸ்தவனல்ல" என்ற புத்தகத்தை படித்தேன். இன்னொரு பக்கம் M.K.காந்தியின் "நான் ஒரு இந்து ஏன்?" என்ற பதிவுக்கு மறுப்பு தெரிவிக்கும் முகமாக "நான் ஒரு இந்து அல்ல, ஏன்?" என்ற இப்பதிவை எழுதத் தூண்டியது. நான் ஒரு இந்து இல்லாவிட்டாலும் பிறப்பால் இந்துக் குடும்பத்தில் பிறந்தவன்.

இந்து - ஒரு விளக்கம்:

அதிகம் துஷ்பிரயோகிக்கப்பட்ட வார்த்தை ஒன்று உண்டென்றால் அது 'இந்து' என்பதே. வெவ்வேறு அர்த்தத்தில் வெவ்வேரு இடங்களில் பிரயோகிக்கப்படுகிறது. உதாரணமாக சிலர் "இந்தியர்" என்று சொல்வதற்கு "இந்து" என்ற வார்த்தையை பிரயோகிக்கிறார்கள். இவ்வர்த்தத்தில் சொல்வதென்றால், நிச்சயமாக நானும் ஒரு இந்துதான்.
பன்முக இந்தியாவிலுள்ள முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், யூதர்கள், செளராஷ்டிரர்கள், இனப்போராளிகள், மனித நேய ஆர்வலர்கள்,நாத்திகர்கள் போன்றோர் தங்களை இந்து என்று சொல்லிக் கொள்ள விரும்பாதவர்களையும் 'இந்து' என்ற அடைமொழிக்குள் கொண்டுவருவது அவ்வளவு சரியானதல்ல.
ஆரம்ப காலங்களில் "இந்து" என்ற பதம் "இந்தியர்" என்பதைக் குறிக்கப் பயன் பட்டிருக்கலாம். தற்காலத்தில் குறிப்பிட்ட மதத்தை குறிக்க இவ்வார்த்தை பிரயோகிக்கப்படுகிறது. உதாரனமாக முஸ்லிம், கிறிஸ்தவர், பெளத்தர், ஜைனர் போன்ற வார்த்தைகள் மற்றும் அமெரிக்கர், பிரித்தானியர், ஆஸ்திரேலியர், ஜப்பானியர் போன்று குறிப்பிட்ட இனத்தவரைக் குறிக்கப் பயன் படுவது போல். இன்னும் சொல்லப் போனால் பல இந்தியர்கள் இந்துவாக இல்லாமலும், பல இந்துக்கள் இந்தியராக இல்லாமலும் இருக்கிறார்கள். உதாரணமாக நேபாளம் மற்றும் இலங்கை இந்துக்கள் இந்தியர் அல்லர்.

மத ரீதியான "இந்து" என்ற வார்த்தைப் பிரயோகம் பெளத்தர்கள்,ஜைனர்கள், சீக்கியர்கள் போன்றோரையும் உள்ளடக்கியே பெரும்பாலும் பிரயோகிக்கப்படுகிறது. யாரெல்லாம் மறைமுகமாக இந்து வேதங்களையும் பிராமனர்களையும் சார்ந்து இருந்தார்களோ அவர்களெல்லாம் "இந்து" என்றே குறிக்கப் படுகின்றனர்.
உதாரணமாக இந்து சட்டப்படி, "இந்து" என்ற சொல், மத ரீதியில் இந்துவாக இருப்பவர்களுக்கு மட்டுமல்லாமல் மேற்சொன்ன பெளத்தர்கள், ஜைனர்கள், சீக்கியர்கள் போன்றோரையும் உள்ளடக்கியே உள்ளது. இவ்வர்த்ததில் "இந்து" என்ற வார்த்தையை பிரயோகிப்போமானால், பெளத்தர்கள் நிறைந்துள்ள ஜப்பானையும், சீனாவையும் இந்து நாடு என்று சொல்ல நேரிடும்.
தொடரும்...

Wednesday, July 27, 2005

ஒடுக்கப்பட்டவனின் உரிமைக்குரல்

தமிழ் கூறும் நல்லுலகிற்கு வணக்கம்! கொடுமையோ கொடுமை என கோவிலுக்கு போனால் அங்கு ரெண்டு கொடுமை ருத்ரதாண்டவம் ஆடியதாம்.
இந்தியாவில் பிறந்து முதுநிலை பட்டம் பெற்று, இந்து மத வருண வேறுபாட்டால் எமது படிப்புக்கேற்ற வேலை கிடைக்கவில்லை. யாம் படித்தது முதுநிலை கணிப்பொறியியல் மற்றும் நிர்வாக மேலாண்மை பட்டம்.

எமது பெற்றோர் இந்து மத்ததில் பிறந்த ஒரே காரணத்துக்காக எமக்கு இந்த இழிநிலை. மனிதனை கூறு போட்டு உயர்ந்தவன் தாழ்ந்தவன் என பிரிக்கும் மதம் எமக்கு தேவை இல்லை என்ற முடிவில் வறுமையிலும் சாப்பாட்டிற்கு கஷ்டப் படும் நிலையிலும் சென்னை திருவல்லிக்கேனி பார்த்தசாரதி கோவிலின் அண்ணதான கியூவில் நிற்க எமது பட்டங்கள் கொடுத்த "திமிர்" அனுமதிக்கவில்லை.

வேலை வாய்ப்பகத்தில் பதிவு செய்து ஏழு வருடங்களாகி விட்டன. தற்காலிகமாக செய்து வந்த இளநிலை கணினி ஆசிரியர் வேலையையும் தமிழக அரசின் புதிய கொள்கையால் பறிபோயிற்று. தற்போதைய வேலை இண்டர்நெட் ப்ரெளசிங் சென்டர் மேற்பார்வையாளர். சொற்ப சம்பளத்துடன் இலவச தங்குமிடம் (செண்டரிலேயேதான்!)

இணையத்தில் தமிழர்களைப் பற்றி அறிந்து கொள்ள வாய்ப்பு அளித்தது தமிழ்மணம் தளம். எனக்கு எழுத்தார்வமோ அல்லது பத்திரிக்கை துறையிலோ அ...ஆ.. கூட தெரியாது. பொதுவாக எல்லா வலைப்புக்களையுமே ரசிப்பதுண்டு. சில தளங்களை பார்த்ததும் இனம் புரியாத அதிர்ச்சி. தமிழ் வலைப்பூக்களில் பார்ப்பனியத்தை நிலை நாட்டும் முயற்சி ஆழமாக வேரூன்றியுள்ளதை அறிந்ததும் ஒரு இனம் புரியாத சோகம்.

பெற்றோருக்கு சமூக அந்தஸ்த்தை மறுத்து, கஷ்டப்பட்டு படித்து முன்னேறியும் சாதாரண வேலை பார்க்கும் நிலைக்குத் தள்ளிய பிராமனீய கொடுமையை வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும் என்ற சிந்தனை என்னை ஆட்கொண்டது.

இந்து மததத்தில் இருக்கும் சமூக அவலங்களால் அன்றாடம் வெளியேறிக் கொண்டிருக்கும் இந்தியாவில் பிறந்து விட்டவர்கள் பார்ப்பனர்களின் அடக்குமுறையால் வெளியேரியவர்களே. பிற மதங்கங்களுக்கு அவர்கள் செல்லாதவரை இந்துவாக கருதப் படாதவர்கள், கிறிஸ்தவமோ அல்லது இசுலாமோ சென்றால் இந்துக்கள் குறைகிறார்கள் என்று ஓலம். இதுதான் ஆரிய சூழ்ச்சி என்று அறிஞர் அண்ணா சொன்னார் போலும்.

ஆரோக்கியம் இல்லாதவன் (தற்போது ஆரோக்கியம் உள்ளவன்) என்ற பெயரில், இந்துத்துவாவுக்கு சாதகமாக எழுதியும் இசுலாமியர்களை கேவலமாக எழுதி வரும் ஆரோக்கியத்தின் பதிவில் பின்னூட்டமிட்டு வந்தேன்.

இராயகரணுக்குப் பதில் என்ற பதிவிலிருந்து தொடங்கிய எமது பின்னூட்டங்களுக்கு ஒரு பதிலைக் கூட ஆரோக்கியத்தால் வைக்க முடியவில்லை. எமக்குத் தெரியும் அவரிடம் பதில் இல்லை. ஏனெனில் அதற்குப் பதில் சொல்வதை விட பிற மதங்களை தூற்றுவது எளிது என்பது அவரின் எண்ணம்.

இந்து மதத்திலிருந்து வெளியேறியவர்களுக்கு வடிகாலாக இருக்கும் ஏனைய மதங்களை பழி சொல்லி ஒழித்து விட்டால் பிராமன ஆதிக்கம் கொண்ட இந்து மதத்தை நிலை நாட்டி விடலாம் என்ற பேராசையில் ஒரு குழுவாக எழுதி வரும் ஆரோக்கியம் போன்ற காழ்புணர்ச்சியாளர்களுக்கு எமது பதிவில் சில கேள்விகளை வைக்க இருக்கிறேன். இவற்றிற்கு மனசாட்சியுள்ள எந்த இந்துவும் பதில் சொல்லலாம்.

இனி இந்து மதத்திலிருந்து வெளியேற எமக்குத் தோன்றிய காரணங்களை பகுதி பகுதியாக வெளியிட உள்ளோம். இவையெல்லாம் இந்து மதத்தில் இல்லை என்ற கடைந்தெடுத்த பொய்யைச் சொல்லி இக்கேள்விகளின் நியாயத்தை மறுக்கும் சிலருக்கு, இவ்வாறு இந்து மதத்திலிருந்து வெளியேறிய சக இந்தியர்கள்,தமிழர்கள், தலித்துக்கள், இந்துக்களை நம்பாதவர்கள் ஆகியோரும் எம்முடன் இணைந்து பதில் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையுடன்...........