ஆரோக்கியம் 'உள்ளவன்'

ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே. முட்டாப் பயலை எல்லாம் தாண்டவக்கோனே - காசு முதலாளி ஆக்குதடா தாண்டவக்கோனே

Thursday, October 06, 2005

பொறுக்கி சாமியாரைக் காணவில்லை

""ஹலோ... நக்கீரன் சகோதரா... எமது குரல் அடையாளம் தெரிகிறதா? ஈலக வாழ்க்கையை துறந்து ஈடல் ஊனும் தன்மையை மறந்து...''

""ஹலோ... ஹலோ... பாளையம் சிகரெட் சாமியார் சங்கரலிங்க பித்தன்தானே...''

""என் பெயரைச் சொல்லி அங்கே நிறைய மோசடிகள்... அதனால் புறப்பட்டு விட்டோம். நாளைக் காலையில் தருமபுரி சுப்பிரமணியசாமி கோயில் அருகில் ஊன் பக்தர் வீட்டிற்கு வாருங்கள்'' கட் செய்தார் சாமியார்.
சிகரெட் புகை ஆசி வழங்கும் பொறுக்கிச் சாமியாரின் லீலைகள் 2.7.05 மற்றும் 16.7.05 இதழ்களில் புகைப்படங்களோடு வெளியானதை வாசகர்கள் மறந்திருக்க முடியாது.

22.9.05 காலையில் தருமபுரியில், சாமியார் சொன்ன முகவரியில் சந்தித்தோம்.
சிகப்புக்கரை வேட்டி, கட்டம் போட்ட சட்டை ஒரு காலை நீட்டி ஒரு காலை மடக்கியபடி... சிகரெட்டை அனுபவித்து இழுத்து உதியபடி "குந்தி' இருந்தார் சங்கரலிங்க சாமி... பக்கத்தில் புதிய பக்தர்கள்.

""பாளையத்தை விட்டு வந்ததற்கான காரணம் இதில் இருக்கிறது'' என்று ஒரு துண்டறிக்கை நோட்டீஸை நம்மிடம் நீட்டினார் ஒரு பக்தர். படித்தோம்.
தீர்த்தமலை பாளையத்தில் உள்ள சங்கரலிங்க திருத்தலத்திற்கும் அடியேனுக்கும் அசுர மனங்கள் கேடு விளைவித்து விட்டன.

மந்திரவாதிகளாலும் ரவுடிகளாலும், சோம்பேறிகளாலும் அடியேன் மனம் கலங்கிவிட்டது. அங்கே நடக்கும் முறைகேடுகளுக்கு நான் பொறுப்பல்ல...'' என்றிருந்தது.""அங்கே என்ன முறைகேடு நடந்தது. உங்க சிகரெட் வாயால சொல்லுங்க?'' என்றோம்.

""அமாவாசை, பௌர்ணமி நாட்கள்லதான் பாளையம் கோயில்ல நாம் தரிசனம் தந்தோம். மற்ற நாட்களில் வரும் பக்தர்களிடம் முகவரியை தாங்க... சாமியாரிடம் கொடுக்கிறோம்னு வாங்கியிருக்காங்க. பிறகு அந்த முகவரிக்கு போய் சாமியார் அனுப்பினார். உங்க வீட்ல தீயசக்தி இருக்கு.

அதை விரட்டணும் 5000 செலவாகும்னு பணம் வாங்கி இருக்காங்க. இப்படி நிறைய... என்னிடம் ஆசி வாங்க வந்த பெண்பக்தர்கள் எழுபேரின் கற்பை சூறையாடி இருக்கிறார்கள். இதையெல்லாம் அங்கேயிருக்கிற 7 பேர்தான் செய்திருக்கிறார்கள்'' தலையைக் குனிந்து கொண்டார் சிகரெட்.

""அங்கே உங்கள் சிஷ்யர் சந்திரசேகரன்... உங்களை இந்த ஊருக்கு அழைத்து வந்த அசோக்குமார் -வாசுகி தம்பதிதானே இருக்கிறார்கள். அவர்களா செய்தார்கள்?''

""யாருடைய பெயரையும் நாம் சொல்ல மாட்டோம். டி.எஸ்.பி. புகழேந்தியிடம் எல்லாவற்றையும் தெரிவித்து விட்டோம். விருப்பம் இல்லையென்றால் இங்கே இருக்க வேண்டாம் என்று கூறிவிட்டார். நாம் புறப்பட்டு விட்டோம்...'' சொன்ன சாமியார். சீறிப் பறந்துவிட்டார்.

அங்கிருந்தபடியே, பாளையத்திலுள்ள அசோக்குமார் வீட்டைத் தொடர்புகொண்டோம்.அசோக்குமார் மனைவி வாசுகி தான் பேசினார். சாமியாரின் குற்றச்சாட்டுகளை கூறினோம்.

"ஆமா... அப்படித்தான் எல்லார்ட்டயும் சொல்றாராம். நோட்டீஸ் அடிச்சிருக்காராம். சாமியார் நல்லவர்தான். அரசியல்வாதிகளும் பணக்காரங்களும்தான் அவரோட மனசை மாத்திட்டாங்க.

போன பவுர்ணமிக்கு முந்திய பவுர்ணமி அன்னிக்கி இங்கே வந்தார். தினம் தினம் பக்தர்கள் உங்களைப் பார்க்க இங்கே வந்து காத்துக்கிடக்கிறாங்க. நீங்க வி.ஐ.பி.கள் வீடுகளே கதியினு போறீங்களேனு என் கணவர் கொஞ்சம் கோபமா கேட்டுவிட்டார். உடனே கோவிச்சிக்கிட்டு கிளம்பினவர்தான்... அப்புறம் வரவேயில்லை.

மற்றபடி சாமியார் சொல்ற மாதிரி ஆங்கே தப்புத் தண்டா நடந்த மாதிரி தெரியலையே...'' வேதனைக்குரலில் சொன்னார் வாசுகி.

பொறுக்கி சாமியார் இப்ப எங்கே? என்று தேடிக்கொண்டிருக்கிறார்கள் பாளையம் பக்தர்கள்.

5 Comments:

  • At Saturday, October 08, 2005 12:37:00 PM, Blogger புலிப்பாண்டி said…

    பிர்மாவின் மகளும், மனைவியும் சர°வதி என்கிற வெட்கக்கேடு ஒருபுறம் இருக்கட்டும்.

    மலையாள நாட்டில் பார்வதி - சிவனின் தங்கையாம் - சொல்கிறவர் சாதாரணமானவரல்லர். ஆராய்ச்சி அறிஞரான மயிலை சீனி. வெங்கடசாமி அவர்கள் எழுதியுள்ளார் (‘செந்தமிழ்ச்செல்வி’ அக்டோபர் 2002).

    இந்து மதக் கடவுள்களின் யோக்கியதையை எடுத்துச் சொன்னால், கூவத்திற்கு நல்ல பெயர் கிடைத்துவிடும் - அந்த அளவுக்குத் துர்நாற்றக் குப்பை!

    துர்க்கையாகிய பார்வதியின் யோக்கியதை இந்த லட்சணத்தில் இருக்கிறது. சர°வதியோ பெற்ற அப் பனாகிய பிர்மாவையே புருசனாக வைத்துக் கொண்டாள்.

    லட்சுமிதேவியின் யோக்கியதை என்ன? இமய மலைச் சாரலில் இலட்சுமிதேவி தனித்திருக்கும்போது, அவ் வழியே சென்று கொண்டிருந்த ஒரு முனி புங்கவரைக் கண்டு, அவரை மோகித்து ஒரு பெண் குழந்தையைப் பெற்றாள் என்று ‘காதம்பரி’ காவியம் கூறுகிறது.

    முத் தேவிகளும் பத்தினிகளல்லர் என்பதை நாரதர், நிரூபிக்கவில்லையா? இரும்புக் கடலையை மூன்று தேவிமார்களிடத்திலும் கொடுத்து வறுத்துத் தரச் சொல்ல, அவர்களால் முடியாத நிலையில், உங்கள் கற்பின் திறன் இவ்வளவுதானா என்று நாரதன் நகைத்ததாகப் புராணங்கள் கூறவில்லையா?

    மும் மூர்த்திகளான சிவன், பிர்மா, விஷ்ணுவின் யோக்கியதைகளும் அசிங்கமானவையே!

    ஒழுக்கமான, யோக்கியமான, நாகரிகமான ஒரு கடவுளைக்கூட இந்து மத முனிபுங்கவர்களால் படைக்க முடியவில்லை. இந்த நிலையில் இந்தக் கடவுள்களிடம் சரணடையவேண்டும் என்றும் துதிபாடவேண்டும் என்றும், காணிக்கைகள் செலுத்த வேண்டும் என்றும், பண்டிகைகள் கொண்டாட வேண்டும் என்றும் கூறுவது யோக்கியப் பொறுப்பு தானா?

    பார்ப்பனர்கள் சுரண்டிட - அவர்களின் சுரண்டல் தொழில் தங்குத் தடையின்றி நடக்கத்தானே நவராத்திரி, சிவன் ராத்திரி போன்ற பண்டிகைகள்.

    இந்து மதக் கடவுள்களில் பெரும்பாலானவை காப்பியடிக்கப்பட்டவைதான். கிரேக்க, ரோம கடவுள் களைக் காப்பியடித்தனர். மாஜிக் கடவுள்கள் என்று அறிஞர் அண்ணா பட்டியலிட்டே காட்டினார்.

    சிவன், இந்திரன் - ஜுபிட்டர்

    பிர்மா - சாட்டர்ன°

    யமன் - மைனா°

    வருணன் - நெப்டியூன்

    சூரியன் - சோல்

    சந்திரன் - லூன°

    வாயு - ஈ யோவ°

    கணேசன் - ஜீன°

    குபேரன் - ப்ளூட்டர்°

    கிருஷ்ணன் - அப்பலோ

    நாரதன் - மெர்குரியன்

    ராமன் - பச்சூ°

    கந்தன் - மார்°

    துர்க்கை - ஜீனோ

    சர°வதி - மினர்வா

    ரம்பை - வீன°

    உஷா - அரோரா

    ஸாகா - வெ°டா

    இப்படி ஒரு பட்டியலே உண்டு.

    இந்தக் காப்பியடிக்கப்பட்ட கடவுள்களுக்கு மனம்போனவாக்கில் புராணக் கதைகளை அசிங்கம் அசிங்கமாகப் புனைந்து இந்து மதம் என்கிற சாக்கடையை உற்பத்தி செய்துகொண்டுவிட்டனர்.

    புராணங்களில் கூறப்பட்ட கதைகளை வெளியே சொல்ல வெட்கப்பட்டுக் கொண்டு ஒவ்வொன்றுக்கும் புதுப்புது விதமான தத்துவார்த்தங்களைப் புனையத் தலைப்பட்டுள்ளனர்.

    முத் தேவிகள் என்றால் மூன்று சக்திகள் என்று புருடா விடுகின்றனர். காளியின் கரங்கள் நூறு - அவற்றில் ஆயுதங்கள் உண்டு ஏன் தெரியுமா? தீயவற்றை அழிப்பதற்கு என்கின்றனர்.

    தீயவற்றை அழிப்பதற்குக் கடவுளுக்கு ஆயுதங்கள் தேவையா?அவனனின்றிதான் ஓரணுவும் அசையாதே - தீயவை எப்படித் தோன்றின என்கிற வினா எழாதா?

    அப்படியே தீயவை என்றாலும் ஒரேயடியாக அவற்றை அழித்து முடித்துவிட வேண்டியதுதானே - தவணை முறையில்தான் அழிக்க வேண்டுமா?

    பக்தர்களோ, பாகவதர்களோ, பார்ப்பனர்களோ, பத்திரிகையாளர்களோ இவற்றிற்கெல்லாம் மரியாதை யாகப் பதில் சொல்லிவிட்டல்லவா நவராத்திரி பிரதாபங்கள்பற்றிக் கதைக்க வேண்டும்.

    இதுவரையில் கூறியதுண்டா? இனியாவது பதில் வருமா? எங்கே பார்ப்போம்!

    படியுங்கள், பரப்புங்கள், கேளுங்கள்

     
  • At Saturday, October 08, 2005 12:37:00 PM, Blogger புலிப்பாண்டி said…

    This post has been removed by a blog administrator.

     
  • At Saturday, October 08, 2005 12:37:00 PM, Blogger புலிப்பாண்டி said…

    This post has been removed by a blog administrator.

     
  • At Sunday, October 09, 2005 12:21:00 AM, Blogger Aarokkiyam உள்ளவன் said…

    புலிப்பாண்டி அண்ணே.

    ஆதங்கம் புரிகிறது. ஒரு தடவை மட்டும் பின்னூட்டம் இடலாமே? முதல் பின்னூட்டத்தைத் தவிர மீதியை நீக்கி விடுகிறேன்.

     
  • At Tuesday, April 04, 2006 9:31:00 PM, Blogger தமிழ் குழந்தை said…

    அன்பரே,

    உங்கள் கருத்துக்கள் மிகவும் அருமையாகவுள்ளது. தமிழ் தகவல் தொழில் நுட்பத்தில் வலைதளம் மூலமாக பல அரிய தகவல்கலளை தந்து எங்களை உற்சாகத்தில் ஆழ்த்திகொண்டிருக்கின்றீர்கள். மிகவும் நன்றி!
    தமிழ் குழந்தை,தமிழ் சிறுவன், தமிழ் சமையல்ருசி ,ஆன்மிகம் ,தமிழ் பொதுஅறிவு

    அன்புடன்,
    தமிழ் குழந்தை

     

Post a Comment

<< Home