ஆரோக்கியம் 'உள்ளவன்'

ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே. முட்டாப் பயலை எல்லாம் தாண்டவக்கோனே - காசு முதலாளி ஆக்குதடா தாண்டவக்கோனே

Wednesday, October 05, 2005

பா.ஜ.க.முதல்வர் நிர்வான நிலை அடைந்தார்

அமெரிக்கர்களும் பிரிட்டிஷாரும் பெரும் பயந்தாங்கொள்ளிகள் என்று மத்தியப் பிரதேச முதல்வர் பாபுலால் கௌர் கூறியுள்ளார்.பாஜகவைச் சேர்ந்த கௌர், கடந்த ஒரு வார காலமாக அமெரிக்கா, இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்தார்.

அன்னிய முதலீட்டாளர்களைச் சந்திக்க அந் நாடுகளுக்குச் சென்ற அவருக்கு போன இடமெல்லாம் உடை களைப்பு சோதனை நடந்தது. பாஜக ஆட்சியில் பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஜார்ஜ் பெர்னாண்டஸையே அமெரிக்க விமான நிலையத்தில் அதிகாரிகள் உடைகளை அகற்றி சோதனையிட்டனர்.

அது போல பாபுலால் கௌரையும் டிரஸ்ஸை கழற்றச் சொல்லி கடுப்பேற்றினர். தான் ஒரு மாநிலத்தின் முதல்வர் என்று சொன்னபோதும் அதை அதிகாரிகள் காதில் வாங்கவில்லையாம்.

நியூயார்க், சிகாக்கோ, லண்டன் என அவர் போய் இறங்கிய விமான நிலையங்களில் எல்லாம் இந்த டிரஸ் அவிழ்ப்பு நடக்க, எரிச்சலுடன் இந்தியா திரும்பி வந்துள்ள கௌர், வந்த வேகத்திலேயே அமெரிக்கர்காவையும் இங்கிலாந்தையும் தாக்க ஆரம்பித்துவிட்டார்.

அவர்களை பொண்டுகப் பயல்கள், பயந்தாங் கொள்ளிகள் என்று அர்ச்சனை செய்த கௌர் கூறுகையில், தீவிரவாதத் தாக்குதல்களையடுத்து அவர்கள் தொடை நடுங்கிக் கிடக்கிறார்கள். இப்படிப்பட்ட பயந்தாங்கொள்ளிப் பயல்களை நான் என் வாழ்க்கையில் பார்த்தது இல்லை.

நீங்கள் இந்தியரைப் போல இருந்தாலே, லேசாக தாடி வைத்திருந்தாலோ, அல்லது நீங்கள் முஸ்லீமாக இருந்தாலே போச்சு. உடனே உங்களை தோண்டித் தோண்டி சோதனை போட்டு விடுகிறார்கள்.

முதலில் சட்டையைக் கழற்றச் சொன்னார்கள். அதைச் செய்தேன். பின்னர் அப்படியே சாக்ஸ் பக்கம் வந்துவிட்டார்கள். அதையும் கழற்றச் சொன்னார்கள். காது ஓட்டைக்குள் கூட எட்டிப் பார்க்கிறார்கள் அந்த பயந்தாங்கொள்ளிகள் என்றார் வெறுப்புடன்.

இன்னும் கூட தன்னைச் சந்திக்கும் முக்கியஸ்தர்களிடம் எல்லாம் அமெரிக்காவையும் இங்கிலாந்தையும் திட்டிக் கொண்டிருக்கிறாராம் கௌர். ரொம்பத்தான் டார்ச்சர் பண்ணிட்டாங்க போலிருக்கு.

அமெரிக்கா உதவியால் இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஜார்ஜ் பெர்ணண்டஸ் அமைச்சராக இருந்த போது இருமுறை நிர்வான நிலை அடைந்தார். இன்று இன்னொரு பா.ஜ.க. முதல்வர்.

பா.ஜ.க. வினரை நிர்வானப்படுத்துவதில் அமெரிக்காவு கொள்ளை பிரியம் போலும். வாழ்க அமெரிக்கா! வாழ்க சங் பரிவாரின் அமெரிக்க வசூல்!!

1 Comments:

  • At Wednesday, October 05, 2005 8:42:00 AM, Blogger புலிப்பாண்டி said…

    இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு பார"தீய" ஜனதா நிர்வான சாதுக்களையே அனுப்ப செயற்குழுவில் முடிவு எடுத்தாலும் ஆச்சரியபடுவதற்கு ஒன்னுமில்லை.

    அவ்வளவுதேன்.

     

Post a Comment

<< Home