ஆரோக்கியம் 'உள்ளவன்'

ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே. முட்டாப் பயலை எல்லாம் தாண்டவக்கோனே - காசு முதலாளி ஆக்குதடா தாண்டவக்கோனே

Sunday, September 25, 2005

காந்தியடிகள் தற்கொலை செய்து கொண்டாரா?

பயங்கரவாத RSS இயக்கத்தின் செயல்பாடுகளை டோண்டு ராகவன் ஒரு பதிவில் மெய்சிலிர்க்க எழுதி இருந்தார். தேசத்தந்தை காந்தியைக் கொன்றதை மறைக்க RSS செய்துவரும் தில்லு முள்ளுகளை கோட்சேயின் தம்பி அம்பலப்படுத்துகிறார்.

தமிழக அரசு இந்தக் கல்வியாண்டில் பிளஸ் டூ வரலாற்றுப் பாடப் புத்தகத்தில் சுதந்திரத்துக்குப் பின் இந்தியா என்ற தலைப்பில் பாடம் ஒன்றை சேர்த்துள்ளது. 157வது பக்கத்தில் உள்ள இந்தப் பாடத்தில் காந்தியைக் கொன்றவர் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.

இது தவறான தகவலாம். வரலாறே தெரியாமல் இதை எழுதியுள்ளார்களாம். கள்ளம், கபடம் இல்லாத மாணவர்கள் இடையே இந்தப் பொய்யான செய்தியை கூறுவதன் மூலம் அவர்களது மனதை கெடுக்கிறார்களாம்.

தமிழக ஆர்எஸ்எஸ் தலைவர் மாரிமுத்து இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லையாம். ஆர்எஸ்எஸ் வன்முறையில் ஈடுபடுவதும் இல்லையாம். அப்படி யாராவது ஈடுபட்டால் அவர்களுக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பில் இடமும் இல்லையாம்.

நாட்டுப் பற்று கொண்டவர்களைக் கொண்ட அமைப்பாம். இதன் கூட்டங்களில் மகாத்மா காந்தியும் கலந்து கொண்டிருக்கிறாராம். RSS காந்தியை மதித்து வருகிறதாம். ஆர்எஸ்எஸ்ஸை பிடிக்காதவர்கள் தான் காந்தியின் கொலைக்கு ஆர்எஸ்எஸ்சே காரணம் என்று கூறுகிறார்களாம். எனவே இதில் நீதிமன்றம் தலையிட்டு, இந்தப் பாடத்தை ஆசிரியர்கள் கற்றுத் தர தடை விதிக்க வேண்டுமாம்.


காந்தியார் ஓர் அரக்கன் என்றும், அவரைக் கொன்ற கோட்சே கடவுள் என்றும் விளம்பரப்படுத் துகிற நாடகத்தை (மை நாதுராம் கோட்சே போல்தே!) சில ஆண்டுகளுக்கு முன்புவரை டில்லியிலும் மும்பை யிலும் நடத்திடக் கூச்சப்படாதவர்கள் எதற்காக கோட்சேயை ஆர்.எஸ்.எஸ்.காரன் அல்லன் என்று சொல்ல முயற்சிக்கிறார்கள் என்பது புரியவில்லை.

கோட்சேயை ஆர்.எஸ்.எஸ்காரனல்ல என்று சொல்லுபவர்கள் கடைந்தெடுத்த கோழைகள் என்று சொல்லுபவர் யார் தெரியுமா? காந்தியார் படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவரும் நாதுராம் கோட்சேயின் தம்பியுமான கோபால் கோட்சேதான் அப்படி அப்பட்டமாகக் கூறி யவர்!
28.1.1994 நாளிட்ட ஃப்ரன்ட் லைன் இதழில் நாதுராம் கோட்சேயின் தம்பியான கோபால் கோட்சேயின் பேட்டி வெளியாகியுள்ளது.


கேள்வி: ஆர்.எஸ்.எஸ்ஸிற்கும் நாதுராமிற்கும் சம்பந்தம் ஏதுமில்லை என்று அத்வானி அண்மையில் கூறியிருக்கிறாரே?

கோபால் கோட்சேயின் பதில்: இது கோழைத்தனமானது. அவரது கூற்றை நான் மறுக்கிறேன். `போ, காந்தியைக் கொல்லு!’ என்று ஆர்.எஸ்.எஸ் தீர்மானம் போடவில்லை என்று வேண்டுமானால் நீங்கள் கூறலாம். ஆனால், நாதுராம் கோட்சேவுக்கும் ஆர்.எஸ்.எஸ்ஸுக்கும் சம்பந்தம் இல்லை என்று நீங்கள் கூற முடியாது. இந்து மகாசபை அப்படி கூறியது. ஆனால் ஆர்.எஸ்.எஸின் பவுதிக் காரியவா ஆக இருந்த போது, 1944-இல் இந்து மகா சபையில் நாதுராம் பணியாற்றினார்.

காந்தியாரை கோட்சே சுட்ட போது ஆர்.எஸ்.எஸ்ஸில் இல்லை; இந்து மகா சபையில்தான் உறுப்பினராக இருந்தார் என்று ஒன்றைக் கிளப்பி ஆர்.எஸ்.எஸ்ஐக் காப்பாற்றப் பார்க்கிறார்கள்.

அப்படியே பார்த்தாலும் ஆர்.எஸ்.எஸ் வேறு அல்ல - இந்து மகா சபையும் வேறு அல்ல! பஜ்ரங்தள் வேறு; விசுவ ஹிந்து பரிஷத் வேறு என்று சொல் அளவில் சொல்லலாமே தவிர, உண்மையில் இவை இரண்டும் சங்பரிவார் என்கிற தலைப்புக்குள் வரவில்லையா? 1930-களில் இந்து மகா சபையுடன் ஆர்.எஸ்.எஸ் உறவுகள் நிலையற்று இருந்தன. ஆனால் சில ஆண்டுகளில் பரஸ்பரம் பலன் அளிக்கிற முறையில் மாறின. மகாசபையின் இளைஞர் அணியாக தாருன் இந்து சபாவை நிறுவிய பாபுராவ் சவார்க்கர் 1931-ஆம் ஆண்டில் அந்த ஸ்தாபனத்தை ஆர்.எஸ்.எஸ்ஸுடன் இணைத்தார்.

கேள்வி: நீங்கள் ஆர்.எஸ்.எஸில் ஓர் அங்கமா?

கோபால் கோட்சேயின் பதில்: நாதுராம் (காந்தியைக் கொன்றவன்) தாத்தாத்ரியா, நான் (கோபால் கோட்சே) கோவிந்த் ஆகிய நாங்கள் சகோ தரர்கள் அனைவரும் ஆர்.எஸ். எஸில் இருந்தோம். எங்கள் வீட்டில் வளர்ந்தோம் என்பதை விட ஆர்.எஸ்.எஸில் வளர்ந் தோம் என்றே கூற வேண்டும். எங்களுக்கு அது ஒரு குடும்பம் போல் என்கிறார்.

இதற்கு என்ன பதில்? காந்தி யார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற கோபால் கோட்சே தன்னை ஆர்.எஸ்.எஸ். என்று கூறுகிறாரே, இதற்கு என்ன பதில்? உயிருள்ள சாட்சியா யிற்றே! ஆயுள் தண்டனை தானே பெற்றார், தூக்குத் தண்டனை பெறவில்லையே என்று சமாதானம் சொல்லப் போகிறார்களா?

காந்தியைக் கொன்ற நாதுராம் விநாயக் கோட்சேயைப் பற்றி முழுத்தகவல்களுடன் ஒரு இணையதளம் செயல்படுகிறது. www.nathuramgodse.com என்னும் பெயருடைய அந்த இணைய தளத்தில் கோட்சேயின் தம்பி, கோபால் கோட்சேயின் பேட்டிகளும், கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன.

ஆர்.எஸ்.எஸுக்கு காவடி தூக்கும் டோண்டு & அரவிந்த நீலகண்டன் என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்? காந்தி தற்கொலை செய்து கொண்டார் என்று மட்டும் தயவு செய்து சொல்லி விடாதீர்கள்.

3 Comments:

  • At Sunday, September 25, 2005 6:12:00 AM, Blogger Ayub said…

    //காந்தி தற்கொலை செய்து கொண்டார் என்று மட்டும் தயவு செய்து சொல்லி விடாதீர்கள்.
    //

    சொன்னாலும் சொல்வார்கள்!

     
  • At Sunday, September 25, 2005 9:42:00 PM, Blogger neo said…

    அருமையான பதிவு!

    1998 ஆம் ஆண்டு காவிப்பண்டாரக் கும்பல் ஆட்சிக்கு வந்த பிறகு, கோபால் கோட்சே புது தில்லியில் வைத்தே வெளிப்படையாக 'செவ்வி' கொடுத்தார், பல செய்தி ஊடகங்களுக்கு முன்னால், 'நானும் நாதுராமும்' ஆர்.எஸ்.எஸ்-இல் தான் இருந்து செயல்பட்டு வந்தோம் என்று.

    மேலும் 'அந்தச் செயல்' (காந்தியின் படுகொலை) குறித்து தமக்கு கிஞ்சித்தும் வருத்தமிலையெனவும், அது குறித்துத் தாம் பெருமை கொள்வதாகவும் வேறு சொல்லியிருந்தார்!

    இந்தக் காலி(வி) கும்பல்,
    "கோல்வாக்கர் தன் மயிரைக் கொடுத்து காந்தியின் புகழை வளர்த்தார"
    என்றோ, "நாங்கள்தான் இந்தியத்தாயின் மயிரை (அதாவது கூந்தலை) வாரி சடை போட்டு பூச்சுட்டி விட்டோம்" என்றோ சொன்னாலும் வியப்பொன்றுமில்லை!

     
  • At Tuesday, September 27, 2005 7:30:00 AM, Blogger இறை நேசன் said…

    Who told Gopal Kodse is a Hindu?

    Who told Gopal Kodse is a Indian?

    Who Know Gopal Kodse?

    Who is Gopal Kodse?

    We know only R.S.S, Golvarkar, Savarkar now Sudarsan.

    All other's were not an R.S.S.
    (Including Advani Also - Birth Place Karachi,Pakistan)

    We didn't know anything other than R.S.S and that's SAHA Classes.

    Hi!Hi!Hi!

     

Post a Comment

<< Home