சூத்திர பாஷை "தமிழ்"
‘நக்கீரன்’ இதழில் அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச் சாரியார் ``இந்து மதம் எங்கே போகிறது?’’ என்ற தொடரை எழுதிக் கொண்டு இருக்கிறார்.
அதன் 25-ஆவது தொடர் (9-3-2005) ஒரு தகவலை வெளியில் கொண்டு வந்துள்ளது.
"நாங்கள் பேசிக் கொள்வது சுத்த சமஸ்கிருதத்தில்தான். அதனால் பல பிராமணர் களுக்குக்கூட நாங்கள் பேசிக் கொள்வது புரியாது.``ரகசியமா பேசுகிறீர்கள்? தமிழில் பேசினால் என்ன?’’ என்று மகா பெரியவர் நகர்ந்தபிறகு சிலர் என்னிடம் கேள்வி கேட்டார்கள். அதற்கு நான் சொன்னேன்.``உனக்கு சமஸ்கிருதம் தெரியவில்லை என்றால் கற்றுக் கொள். உனக்காக அவர் ஒரு நாளைக்கு எத்தனை தடவை ஸ்நானம் பண்ணுவார்? புரிந்து நடந்து கொள்.."
(`நக்கீரன்’ 9-3-2005 பக்கம் 18,19)
இதனைப் புரிந்து கொள்வதற்கு என்ன சிரமம் இருக்கிறது? சங்கராச்சாரியார் தமிழைப் பேசினால். அவர் தீட்டுப்பட்டு விடுவார்; காரணம் தமிழ் நீஷப்பாஷை.
தமிழைப் பற்றியும் தமிழர்களைப்பற்றியும் பார்ப்பனர்களின் நிலை என்ன என்பதைத் தெரிந்தவர்களுக்கு இது கண்டிப்பாக ஆச்சரியத் தைக் கொடுக்காது.
கோயில் கருவறைக்குள் தமிழன் அர்ச்சகன் ஆனால் சாமி தீட்டாகிவிடும்; தமிழில் வழிபட்டாலும் தீட்டாகி விடும் என்பதுதானே அவர்களின் நிலை.
ஆண்டாளின் ‘திருப்பாவை’யில் (பாடல் எண் 2) தீக்குறளைச் சென்றோதோம் என்றவர்க்கு விளக்கம் சொன்ன இதே சங்கராச்சாரியார் திருக்குறளைச் சென்று ஓதமாட்டோம் என்றாரா? இல்லையா?
குறளை என்றால் கோள் சொல்லுதல் என்று பொருள். கோள் சொல்லும் தீயதைச் சொல்ல மாட்டோம் என்பதற்கு மாறாக திருக்குறளை ஓதமாட்டோம் என்று சொன்ன காழ்ப்புணர்ச்சிக் காரர்கள் தானே இந்தச் சங்கராச்சாரியார்கள்- பார்ப்பனர்கள்.
``சமஸ்கிருத பாஷை பிரம்மத்திற்குச் சமானம். அதாவது பரம் பொருளுக்குச் சமானம். பரம் பொருள் எங்கும் நிறைந்திருக்கிறது. அதற்கென்று ஒரு குறிப் பிட்ட பகுதியோ, ஒரு தேசமோ கிடையாது. இதைத் தான் ``சர்வ வியாபகத்வம்’’ என்பார்கள்.’’
``உலகில் முதன் முதலில் தமிழ்மொழி தோன்றிற்று. அதுவும் அகத்தியரால் தோற்றுவிக்கப்பட்டது. பிறகு தான் சமஸ்கிருதம் வந்தது. அதுவும் கொஞ்ச நூற்றாண்டு களுக்கு முன்புதான் `பாணினி’ என்ற ஒருவர் இந்த சமஸ்ருதத்திற்கு இலக்கண சாஸ்திரங்களை இயற்றினார். அது முதற்கொண்டுதான் அந்த மொழியும், பாஷையும் வளர்ச்சி ஏற்பட்டிருக்கும் என்று கூறுகிறார்கள்.
ஆனால் பாஷா சாஸ்திரம் என்று சொல்லக்கூடிய சாஸ்திரத்தில் சமஸ்கிருதம்தான் பண்டைய காலத்திலிருந்து வந்த ஒரு பாஷை என்று கூறப்பட் டுள்ளது” என்று கூறியவரும் சாட்சாத் அதே சந்திர சேகரேந்திர சரஸ்வதிதான். (ஆதாரம்; `ஞானவழி’ - வானதி பதிப்பக வெளியீடு).
பார்ப்பனர்கள் தமிழ் மொழியைத் தங்களது வாழ்க்கை வழிக்காகவும் வசதிக்கு ஆகவும் பேசு கிறவர்களே ஒழிய அம்மொழியில் உள்ள அன்புக் காகவோ, ஆர்வத்திற்கு ஆகவோ பேசுகிறவர்கள் அல்ல. உதாரணம் என்ன வென்றால், இந்தப் பார்ப் பனர்கள் தங்களுடைய வைதீக காரியங்களிலும் தேவாதி பூஜை பிரார்த் தனைகளிலும் தமிழை விலக்கி வைத்திருக்கிறவர்கள்.
இந்தப் பார்ப்பனர்கள் ஆரிய மொழி (வட மொழி)யையே மேலாக எண்ணுவதோடு, அதனுடைய மேன்மையைக் காப்பாற்றவே அதிகமாக முயற்சிப்பவர்கள்.
இந்தப் பார்ப்பனர்கள் தங்களுடைய ஒழுக்க ஆதாரங்கள் தமிழ்மொழியை சூத்திர (இழிவான - மிலேச்ச) பாஷை என்று குறை கூறுகிறதை ஏற்றுக் கொண்டு அதன்படி பெரிதும் ஒழுகுபவர்கள்’’ (`குடிஅரசு’ 4-5-1939) என்று தந்தை பெரியார் அறுதியிட்டுக் கூறியுள்ளார்.
இதனையே அறிஞர் அண்ணாவும் தன் பாணியிலே எழுதுகின்றார்.
``தமிழ்நாட்டில் பிறந்தும், தமிழ்மொழி பயின் றும், தமிழரெனச் சொல்லிக் கொண்ட போதிலும், தமிழ் மொழி மூலம் பிழைத்து வந்தா லும், தமிழிலே பண்டிதரென பட்டம் பெற்றாலும், சங்க நூல் கற்றாலும், பார்ப்பனர்கள் தமிழிடத்திலே அன்பு கொள்வதில்லை.
அதனைத் தம் தாய்மொழி யெனக் கருதுவதில்லை. அவர்களின் எண்ணமெல்லாம் வட மொழியாகிய ஸம்ஸ்கிருதத்தின் மீதுதான்” (திராவிட நாடு’ 2-11-1947) என்கிறார் அறிஞர் அண்ணா.
சனாதனப் பார்ப்பனர்களிலிருந்து அரசியல் பார்ப்பனர்கள் வரை இதில் ஒத்தக் கருத்துதான்.
``என்கைக்கு அதிகாரம் வந்தால், நான் சர்வாதி காரியானால் இந்தியர்களை இந்தியுடன் சம°கிருதத் தையும் கட்டாயப் பாடமாகப் படிக்கச் செய்வேன்’’ என்றவர்தான் `வாயாடி’ சத்தியமூர்த்தி அய்யர் (`மெயில்’ 25-7-1939).
``சமஸ்கிருதத்தைப் படிப்படியாகப் புகுத்தத்தான் இப்பொழுது ஹிந்தியைத் திணிக்கிறேன்’’ என்று சென்னை லயோலா கல்லூரி விழாவில் (24-7-37) சென்னை மாநிலப் பிரதம அமைச்சர் என்ற தகுதியில் பேசியவர்தான் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி).
ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதி கோல்வால்கரின் கூற்றும் இதுதான்.
``மொழிப் பிரச்சினைக்கு ஒரே தீர்வுதான் இருக்கிறது. சமஸ்கிருதம் ஆட்சி மொழியாக வருகின்ற காலம் வரை, இந்திக்கே நாம் முன்னுரிமை தந்து, நமது வசதிக்காக ஆட்சி மொழியாக்கிக் கொள்ள வேண் டும்” (Bunch of Thoughts) அத்தியாயம் 8, பக்கம் 113)
இவ்வளவுக்குப் பிறகும் பார்ப்பனர்களை தமிழர்கள் என்று எப்படி எடுத்துக் கொள்வது! தமிழுக்கே தூணாக இருந்த, கோவில்களுக்கு ஆயிரக்கணக்கான ஏக்கர்களைத் தந்த சோழர்கள், பாண்டியர்கள் போன்ற சக்தி வாய்ந்த அரசர்கள் நினைத்திருந்தால் தமிழில் அர்ச்சனைகளை நடத்தச் சொல்லியிருக்கலாமே. அவர்களையெல்லாம் மறந்துவிட்டு தமிழை ஒரு மொழிப் பிரச்சினையாக்கி, ஜாதிப் பிரச்சினையாக்கி அரசியலாக்கிய பெரும வந்தேரி பார்ப்பனர்களையேச் சாரும்.

14 Comments:
At Sunday, September 25, 2005 10:52:00 PM,
neo said…
குக்கலைக் குளிப்பாட்டி நடுவீட்டில் உட்கார வைத்தாலும் அது 'வெளியே' இருப்பதைத்தான் தின்ன ஓடும்.அது போல சிலதுகளை நம்முடைய முன்னோர்கள் 'குளிப்பாட்டி', இடம் தந்து தமிழகத்திலே சமூக அங்கீகாரம் தந்தார்கள். அதன் 'பலனை' இன்று வரை தமிழர்களும் தமிழும் நன்றாக அனுபவிக்கிறோம்!
தாத்தாச்சாரியார் நன்றாகவே கிழித்துக் கட்டுகிறார் இந்த ஜென்மங்களை. ஒன்றாவது வாயைத் திறக்க வேண்டுமே..முடியாதல்லவா!
தாத்தாச்சாரியாருக்கு 'காவிரியில் ஸ்நானம் செய்யப் போறச்சே வழுக்கி விழுந்து 'சித்தப் பிரமை' பிடிச்சுடுத்து! அதான் இப்பிடிப் பேசறா!' - என்று சில கணவான்கள் திருவாய் மலர்ந்து அருளக்கூடும்.
'கண்ணாடிக் குடுவைக்குள்' இந்த ஒட்டு மொத்தப் பிரபஞ்சத்தையே அடைக்க முயற்சி செய்யும் இந்த அதிமேதாவிகள் பற்றி 'மிகை உணர்ச்சிகள்' இல்லாமல் இருக்க நாமும் முயற்சி செய்வோம்! ;)
At Sunday, September 25, 2005 11:07:00 PM,
dondu(#4800161) said…
காந்தி சுதந்திரத்திற்குப் பாடுபட்டார் என்பது என்னவோ ஓரளவு உண்மை. RSS இன் செயல்பாடுகளை காந்தி ஆதரித்திருந்தால் நமக்கு சுதந்திரம் 1927 ஆம் ஆண்டே கிடைத்திருக்கும். உலகப் புகழ் பெற்றவர்களைப் பற்றி எழுதிய மைக்கேல் ஹார்ட் கூட The 100 என்ற தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
சம்ஸ்கிரதம்தாம் அனைத்து மொழிக்கும் தாய் மொழி. யூதர்களின் மொழிக்கும் சம்ஸ்கிரதத்துக்கும் உள்ள பல ஒற்றுமைகள் எனக்கு வியப்பைக் கொடுத்துள்ளன. டச்சு மொழியிலுள்ள பல வார்த்தைகளை சம்ஸ்கிரதம் ஏற்றுக்கொண்டுள்ளது.
தமிழ் மொழியால் ராமதாஸ், திருமாவளவனுக்குத்தான் பயன் அதிகம் (இதை வைத்துதானே பொழப்பு நடத்த முடியும்). கலைஞர் கருணாநிதி கூட தமிழை செம்மொழி என்று அறிவித்ததோடு ஒதுங்கி விட்டார். அவர் பழுத்த அரசியல்வாதி. அவருக்குத் தெரியாததா?
தமிழை நாங்கள் நீச மொழி என்ரு சொல்லவில்லை. பெரிவாழ் சுவாமிகள்தான் சொன்னார். கோர்ட்டில் வக்குமூலம் கொடுக்கும் ஜெயேந்திரர் சுவமிகளும் விஜயேந்திரர் சுவாமிகளும் தமிழில்தான் கொடுக்கிறார்கள்.
At Sunday, September 25, 2005 11:31:00 PM,
நெல்லையன் said…
///காந்தி சுதந்திரத்திற்குப் பாடுபட்டார் என்பது என்னவோ ஓரளவு உண்மை. RSS இன் செயல்பாடுகளை காந்தி ஆதரித்திருந்தால் நமக்கு சுதந்திரம் 1927 ஆம் ஆண்டே கிடைத்திருக்கும்///
திரு.டோண்டு அவர்களுக்கு...
அது எப்படி ஓரளவு உண்மை? காந்தி அடிகளின் நீண்டகால அமைதிப் போராட்டங்கள்தான் ஆங்கிலேயருக்கு இந்தியரின் மீதான பரிவை அதிகப்படுத்தியது. இதே முறையைதான் தென் ஆப்பிரிக்காவில் நெல்சன் மண்டேலா கடைபிடித்து தன் இன மக்களுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்தார்.
RSS செய்த பயங்கரவாதங்களை நாடு இன்னும் மறந்துவிடவில்லை. நீங்கள் RSS இன் அனுதாபியாக இருக்கலாம். தயவு செய்து காந்தியாரின் அமைதிப் போராட்டத்தை கொச்சை படுத்தாதீர்கள்.
வாஜ்பாய் போன்ற RSS விசுவாசிகள் இந்தியசுதந்திரப் போராட்ட வீரர்களைக் காட்டிக் கொடுக்காமல் இருந்திருந்தால் வேண்டுமானால் 1927 இல் சுதந்திரம் கிடைத்திருக்கலாம் என்பது 100 உண்மை.
At Monday, September 26, 2005 1:15:00 AM,
AATHAVAN said…
"தமிழில் பேசினால் என்ன?” என்று மகாபெரியவர் நகர்ந்த பிறகு சிலர் என்னிடம் கேள்வி கேட்டார்கள். அதற்கு நான் சொன்னேன்.
“உனக்கு சமஸ்கிருதம் தெரியவில்லை என்றால் கற்றுக்கொள். உனக்காக அவர் ஒரு நாளைக்கு எத்தனை தடவை ஸ்நானம் பண்ணுவார்? புரிந்து நடந்துகொள்...” என்றேன். அப்போதும் அந்த கேள்வியைக் கேட்டவர்களுக்குப் புரியவில்லை.
உங்களுக்கு...?"
- Ramanuja thathaachari in his thodar
At Monday, September 26, 2005 1:19:00 AM,
AATHAVAN said…
What a Shame on us as tamilians who respects these 'periyavaaL's!
At Monday, September 26, 2005 1:29:00 AM,
புலிப்பாண்டி said…
/சம்ஸ்கிரதம்தாம் அனைத்து மொழிக்கும் தாய் மொழி/
Mr.Dondu, Do you have any proof for this claim?
அதாஞ்சொன்னாங்களே கேக்கறவன் கேணையன்னா.....
கே.ஆர்.விஜயாவுக்கு.....ன்னு
போய்யா நீயும் உன் சமஸ்கிரதமும்.
டோண்டு!
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா!!!!
At Monday, September 26, 2005 2:15:00 AM,
thiru said…
aarokyam ullavare !!
unga blog-i patichchu sirichu sirichu, vayiru punnaa pOrathuthaan micham.
At Thursday, September 29, 2005 1:49:00 AM,
புலிப்பாண்டி said…
நான் உயிரினும் மேலாக நேசிக்கும் தாய் மொழியை சூத்திர பாசைன்னு சொன்ன பார்ப்பன குடுமிகளி வன்மையாக கண்டிக்கிறேன்.
சாதாரனமா பார்ப்பனர்கள் குளிப்பதில்லை. தமிழ்ல பேசியாவது குளிக்கட்டும்
At Thursday, September 29, 2005 3:56:00 AM,
G.Ragavan said…
இந்தப் பதிவு தமிழை ஆதரிப்பதை விட பார்ப்பணர்களை எதிர்ப்பதாகத் தோன்றுகிறது.
சரி. அதை விடுங்கள். பிரச்சனைக்கு வருவோம். உண்மைதான் கோயிலில் சேரசோழபாண்டியர் காலத்தில் இருந்த தமிழ் இன்று இல்லைதான். கண்டிப்பாகக் கோயிலில் தமிழ் நுழையத்தான் வேண்டும். அதை எதிர்ப்பவர் தீயவர்தான்.
ஆனால் இந்த நிலை கோயிலில் மட்டுமா இருக்கிறது? இஸ்லாமியர் அரபு மொழியில் தானே தமிழ்நாட்டில் ஓதுகின்றார்கள்? அவர்களுக்கு அரபு மொழியும் குரானும் புனிதமாகப் படுகிறது. அது போல பார்ப்பணர்களுக்கு வடமொழி. தமிழில் தொழுகை நடத்த வேண்டும் என்று ஒரு இந்து சொன்னால் அது எவ்வளவு அபத்தமோ அவ்வளவு அபத்தம் இந்து இல்லாதவர் கோயிலுக்குள் என்ன மொழி இருக்க வேண்டும் என்று சொல்வதும்.
இறைவனுக்குத் தமிழ் புரியும் என்றால் அரோக்கியம் உள்ளவர் தமிழில் தொழுகை நடத்தலாமே.
இந்த விஷயத்தில் கிருத்துவர்களைப் பாராட்டலாம். சர்ச்சுக்குள் தமிழ் வழிபாடும் நடத்துகிறார்கள்.
At Thursday, September 29, 2005 5:15:00 AM,
வாசகன் said…
இஸ்லாமின் பார்வையில் எந்த ஒரு மொழியும் மற்றெந்த மொழியை விடவும் உயர்ந்ததில்லை. Language is nothing but a media to express our thoughts.
அவரவரும் ரகசியமாகவும் உள்ளச்சத்தோடும் இறைவனிடம் பிரார்த்தியுங்கள் என்று சொல்கிற இஸ்லாம் தாய்மொழியில் பிரார்த்திப்பதை தான் அப்படி சொல்கிறது.
தொழுகை என்கிற கூட்டு வழிபாடு அரபியில் இருப்பதற்கு காரணம் Global Uniformity:
எப்படி ஒரு ராணுவத்தில் பலமொழி பேசுபவர்கள் இருந்தாலும் Right turn, LeftTurn,AboutTurn என்று ஆங்கிலத்தில் சொல்வதை Uniformity என்று ஏற்றுக்கொள்கிறோமல்லவா, அது போலத்தான்.
(இப்பதிவில் தந்திரமாக இஸ்லாமை எடுத்துவைத்த சகோ.ராகவனை பாராட்டுகிறேன்).
At Thursday, September 29, 2005 6:27:00 AM,
G.Ragavan said…
நண்பரே ஜமாலுதீன், தந்திரமாக நான் இஸ்லாமை இழுக்கவில்லை. என்னுடைய பதிவுகளையும் பின்னூட்டங்களையும் நீங்கள் படித்திருந்தீர்களலானால் அது புரிந்திருக்கும்.
என்னுடைய கேள்வி ஆரோக்கியம் உள்ளவருக்கே. கண்டிப்பாக இஸ்லாத்தை எதிர்த்து இல்லை.
நான் கோயிலில் வடமொழிப் பயன்பாட்டைக் கடுமையாக எதிர்க்கிறேன். ஆனால் அது என் வீட்டுப் பிரச்சனை. நிச்சயமாக அடுத்த வீட்டுக்காரனை கூப்பிட்டு வழக்கு வைக்க மாட்டேன்.
நீங்கள் சொல்லும் யூனிஃபார்மிடி இஸ்லாமியர்களிடத்தில் மட்டுந்தானா இருக்க வேண்டும். இந்துக்களிடத்தில் இருக்க வேண்டாமா? ஒரு நியாயம் சொல்கின்ற பொழுது அது எல்லாருக்கும் பொருந்துகின்றதா என்று பார்க்க வேண்டும்.
இதனால் நான் யூனிபார்மிடி என்ற பெயரில் வடமொழியை ஏற்றுக் கொண்டதாகப் பொருள் இல்லை. சொல்ல வருவது என்னவென்றால்...அங்கு யூனிபார்மிடி பொருந்தும் என்றால் இங்கும் பொருந்தும். நாம் மற்றவர்களைச் சொல்லும் முன் நமது நிலையைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்பதே.
மற்றபடி நான் இஸ்லாமின் மீது வீண்பழி சுமத்துகின்றவன் இல்லை என்பது மற்ற இஸ்லாமிய அன்பர்களுக்குத் தெரியும். நல்லடியாரும் அப்துல் குத்தூசும் என்னை இந்த வலைப்பூவில் நன்கு அறிவார்கள்.
At Thursday, September 29, 2005 8:14:00 AM,
Aarokkiyam உள்ளவன் said…
{கண்டிப்பாகக் கோயிலில் தமிழ் நுழையத்தான் வேண்டும். அதை எதிர்ப்பவர் தீயவர்தான்)
என்னா ராகவன் சார், இப்படி பயந்து கொண்டு சொல்வதை விட ஓப்பனா தமிழை நீச மொழியாகக் கருதும் பிராமனர்கள் தீயவர்தான் சொல்லி இருக்கலாமே?
{இஸ்லாமியர் அரபு மொழியில் தானே தமிழ்நாட்டில் ஓதுகின்றார்கள்? }
ஹி..ஹி.. ஆனா பாருங்க யாரும் தமிழ் நீச மொழின்னு பத்துவா கொடுக்கலே. தமிழ்ல கடவுள வழிபட்டா ஸ்நானம் பண்ணச் சொல்லலே. வேதம் ஓதுனா/கேட்டா காதுல ஈயத்தைக் காய்ச்சி ஊத்தச் சொல்லி கீதாபதேசம் பண்ணலே.
{தமிழில் தொழுகை நடத்த வேண்டும் என்று ஒரு இந்து சொன்னால் அது எவ்வளவு அபத்தமோ அவ்வளவு அபத்தம் இந்து இல்லாதவர் கோயிலுக்குள் என்ன மொழி இருக்க வேண்டும் என்று சொல்வதும்}
ஓஹோ...தந்தை பெரியார் இந்துவாகப் பிறந்துதானே சாமி அபத்தமா/அபிஸ்டுவா சொன்னார்? பெரியார் தேவைப்பட்டா இந்தூம்பீங்க. இல்லேன்னா இந்து விரோதின்னு சொல்லி கோயில்ல பத்துவா கொடுப்பீங்க. சரி இப்ப சொல்லுங்க, ஒரு இந்து (நானும் பிறப்பால் இந்துதான்) சொன்னாக்கா கோயில்ல தமிழில் பூசை செய்ய முன்வருவார்களா?
{நீங்கள் சொல்லும் யூனிஃபார்மிடி இஸ்லாமியர்களிடத்தில் மட்டுந்தானா இருக்க வேண்டும். இந்துக்களிடத்தில் இருக்க வேண்டாமா}
எந்த லோகத்து இருக்கிறீங்க ராகவன் சார்?. யூனிஃபார்மிட்டின்னா கிலோ என்ன விலைன்னு கேக்குறதுதான் இந்து மதம். யூனிஃபார்மிட்டிய முதல்ல மனுசனுக்கு கொடுங்க. அப்புறம் மத்த சமாச்சாரத்தைப் பேசலாம்.
{மற்றபடி நான் இஸ்லாமின் மீது வீண்பழி சுமத்துகின்றவன் இல்லை என்பது மற்ற இஸ்லாமிய அன்பர்களுக்குத் தெரியும்}
இசுலாமியர்களிடம் தலையையும், பார்ப்பனர்களிடம் வாலையும் காட்டி பிணாத்தி வருவதை இப்போ எல்லோரும் புரிந்து விட்டார்கள். ஒரு பதிவுல நான் மகாபாரதம் பற்றி எழுதுனபோது, அது கட்டுக்கதைதான்னு சொல்லிப்புட்டு, சமீபத்துல அந்த மகாபாரத தருமன் பேருல பிணாத்துனது நீங்கதனே?
பாகிஸ்தான்ல உள்ள முசுலிம் மாதிரிதான் எல்லா முஸ்லிமும்னு கூட சொன்னீங்களே? பின்லாடன முஸ்லிம்கள் தலைவராகச் சொல்றாங்கன்னு சொன்னது யாரப்பூ?
{இந்தப் பதிவு தமிழை ஆதரிப்பதை விட பார்ப்பணர்களை எதிர்ப்பதாகத் தோன்றுகிறது}
இப்படிச் சொல்லி எம்போன்ற சூத்திர பிறவிகளின் தமிழ் உணர்வைக் கேவலப்படுத்தாதீங்க. முதலில் பகிரங்கமா பார்ப்பனர்கள் தமிழுக்கு எதிரின்னு சொல்லுங்க. முடிஞ்சா டோண்டு ராகவன் சார்? கிட்டயும் சொல்லுங்க.
பி.கு. என் பேரும் ராகவன் தான். அதுனாலதான் உங்க பேருக்கு மட்டும் மரியாதை கொடுக்கிறேன் ஹி.ஹி..
At Thursday, September 29, 2005 11:16:00 PM,
G.Ragavan said…
// என்னா ராகவன் சார், இப்படி பயந்து கொண்டு சொல்வதை விட ஓப்பனா தமிழை நீச மொழியாகக் கருதும் பிராமனர்கள் தீயவர்தான் சொல்லி இருக்கலாமே? //
பயமென்று ஒன்றுமில்லை. பிராமணர்கள் அப்படிச் சொன்னால் அவர்கள் தீயவர்கள்தான். யார் சொன்னாலும் தீயவர்கள் என்று சொன்னேன்.
// ஹி..ஹி.. ஆனா பாருங்க யாரும் தமிழ் நீச மொழின்னு பத்துவா கொடுக்கலே. தமிழ்ல கடவுள வழிபட்டா ஸ்நானம் பண்ணச் சொல்லலே. வேதம் ஓதுனா/கேட்டா காதுல ஈயத்தைக் காய்ச்சி ஊத்தச் சொல்லி கீதாபதேசம் பண்ணலே. //
நீங்கள் சொல்லியிருப்பவைகளை நான் மறுக்கவும் இல்லை. அப்படிச் சொல்கின்றவர்கள் நிச்சயமான நீசர்கள்.
// ஓஹோ...தந்தை பெரியார் இந்துவாகப் பிறந்துதானே சாமி அபத்தமா/அபிஸ்டுவா சொன்னார்? பெரியார் தேவைப்பட்டா இந்தூம்பீங்க. இல்லேன்னா இந்து விரோதின்னு சொல்லி கோயில்ல பத்துவா கொடுப்பீங்க. சரி இப்ப சொல்லுங்க, ஒரு இந்து (நானும் பிறப்பால் இந்துதான்) சொன்னாக்கா கோயில்ல தமிழில் பூசை செய்ய முன்வருவார்களா? //
இந்த நிலையை நான் வருந்தத்தக்கது மாறவேண்டும் என்று வெளிப்படையாகக் கூறியிருக்கின்றேனே. இந்நிலை நிச்சயம் மாறவேண்டும்.
// இசுலாமியர்களிடம் தலையையும், பார்ப்பனர்களிடம் வாலையும் காட்டி பிணாத்தி வருவதை இப்போ எல்லோரும் புரிந்து விட்டார்கள். ஒரு பதிவுல நான் மகாபாரதம் பற்றி எழுதுனபோது, அது கட்டுக்கதைதான்னு சொல்லிப்புட்டு, சமீபத்துல அந்த மகாபாரத தருமன் பேருல பிணாத்துனது நீங்கதனே? //
நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். மகாபாரதம் கட்டுக்கதை என்பதை நான் மறுக்கவில்லையே. ஆனால் நான் பினாத்தியதை அந்தக் கதையை வைத்துக் கொண்டு பினாத்தினேன். அந்த பாத்திரங்கள் தெரிந்த பாத்திரங்கள் என்பதால். அவ்வளவே. என்னங்க இது...கதைய படிச்சிருக்கீங்க. அங்க நீங்க எதுல முரண்படுறீங்கன்னு எழுதீருக்கலாம்ல. :-)
// பாகிஸ்தான்ல உள்ள முசுலிம் மாதிரிதான் எல்லா முஸ்லிமும்னு கூட சொன்னீங்களே? பின்லாடன முஸ்லிம்கள் தலைவராகச் சொல்றாங்கன்னு சொன்னது யாரப்பூ? //
மன்னியுங்கள் நண்பரே. நான் அப்படிச் சொல்லவில்லை. பாகிஸ்தானில் உள்ள முஸ்லீம்களை வைத்து உலக முஸ்லீன்களை எடை போடக் கூடாது என்று சொன்னேன். இந்து மதத்திலும் சிலர் உள்ளனர். அவர்களை வைத்து எல்லாரையும் எடை போட வேண்டாம் என்று சொல்வதற்காக சொல்லப்பட்டது. அவ்வளவே. நான் தெளிவாகச் சொல்லியிருக்கிறேன். ஒருமுறை ஏதோவொரு பதிவில் பின்லேடன் கூட இஸ்லாமியர் என்று சொன்ன நினைவு. அது கூட தவறு செய்கின்றவர் எங்கும் உண்டு என்று சுட்டிக்காட்ட மட்டுமே. நான் இஸ்லாமை வீண் வம்புக்கு இழுக்கும் ஆரோக்கியத்தின் பதிவுகளைக் கண்டித்துப் பின்னூட்டம் போட்டிருக்கிறேன். அது செவிடன் காதில் ஊதிய சங்கு என்பதால் விட்டு விட்டேன். மற்றபடி நான் இஸ்லாமிற்கோ இஸ்லாமியர்களுக்கோ எந்த விதத்திலும் எதிரியில்லை. அதே போல பிராமணீய-வடமொழி ஆதிக்கத்திற்கும் ஆதரவில்லை.
// முதலில் பகிரங்கமா பார்ப்பனர்கள் தமிழுக்கு எதிரின்னு சொல்லுங்க. முடிஞ்சா டோண்டு ராகவன் சார்? கிட்டயும் சொல்லுங்க. //
எல்லாப் பார்ப்பணர்களையும் அப்படிச் சொல்ல மாட்டேன். ஆனால் எந்தப் பார்ப்பணரும் தமிழுக்கு எதிரியென்றால் கண்டிப்பாக அவரை வன்மையாகக் கண்டித்தே ஆகவேண்டும்.
// இப்படிச் சொல்லி எம்போன்ற சூத்திர பிறவிகளின் தமிழ் உணர்வைக் கேவலப்படுத்தாதீங்க. //
அப்ப என்ன என்னன்னு நெனச்சீங்க :-))
உங்கள் பெயரும் ராகவன் என்று அறிந்து மகிழ்ச்சி.
At Saturday, October 01, 2005 8:12:00 AM,
dondu(#4800161) said…
இங்கு போலி டோண்டு மறுபடியும் வந்து பின்னூட்டம் கொடுத்திருக்கிறார்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment
<< Home